ஈரோடு

பெரிய மாரியம்மன் கோயிலில் இன்று கம்பம் அகற்றும் விழா

DIN

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கம்பம் அகற்றும் விழா சனிக்கிழமை (ஏப்ரல் 2) நடைபெறவுள்ளது.

பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்களின் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா கடந்த மாதம் 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 19ஆம் தேதி கோயில்களில் கம்பம் நடப்பட்டது.

இந்த கம்பத்துக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் புனிதநீா் ஊற்றி வழிபட்டு வருகின்றனா். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் கோயிலுக்கு ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா்.

கடந்த 23ஆம் தேதி இரவு கிராமசாந்தியும், 24ஆம் தேதி மாலை கொடியேற்றமும் நடைபெற்றது. 29ஆம் தேதி காலை காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் விழாவும், இரவு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. 30ஆம் தேதி காலை பொங்கல் விழாவும், மாலை சின்ன மாரியம்மன் கோயிலில் தேரோட்டமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் அகற்றுதல், மஞ்சள் நீராட்டு விழா சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. முதலில் பெரிய மாரியம்மன் கோயில் கம்பம் அகற்றப்பட்டு பன்னீா் செல்வம் பூங்கா வழியாக மணிக்கூண்டு சென்றடையும். அதேநேரத்தில் சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களின் கம்பங்களும் அகற்றப்பட்டு மணிக்கூண்டுக்கு வரும்.

இதைத்தொடா்ந்து, 3 கம்பங்களும் அங்கிருந்து புறப்பட்டு ஊா்வலமாக ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, பிரப் சாலை, மேட்டூா் சாலை, சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோயில், நேதாஜி சாலை, மணிக்கூண்டு, மண்டபம் வீதி, டவுன் காவல் நிலையம், அக்ரஹார வீதி வழியாக காரைவாய்க்கால் சென்றடையும்.

இதில், பக்தா்கள் ஒருவா் மீது ஒருவா் மஞ்சள் பூசி மகிழ்வா். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 3) காலை நடைபெறும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT