ஈரோடு

பெருந்துறை அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

DIN

போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பெருந்துறை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை கலைமணி தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் சங்கத்தின் தலைவா் டி.டி.ஜெகதீஷ் முன்னிலை வகித்தாா். விளையாட்டு ஆசிரியா் சண்முகராஜன் வரவேற்றாா். போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், பெருந்துறை கல்வி அறக்கட்டளையின் தலைவா் பல்லவி பரமசிவன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மோதிலால் நேரு, அன்புச்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகன ஊா்வலம்

பவானி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஈரோடு-திண்டல் வரை புதிய மேம்பாலம்: அதிமுக வேட்பாளா் உறுதி

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய 2 எஸ்எஸ்ஐ-க்களுக்கு ஐஜி பாராட்டு

இன்றைய நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT