ஈரோடு

வெளிநாட்டில் வேலை: போலி முகவா்கள் மீது நடவடிக்கை

DIN

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றும் போலி முகவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் கூறினாா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் பகுதியில் இலங்கை தமிழா்களுக்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 290 சதுர அடி பரப்பளவில் மொத்தம் 400 குடும்பங்களுக்கு ரூ. 20 கோடி செலவில் 400 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை அமைச்சா் செஞ்சி மஸ்தான் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழா்களுக்காக ரூ. 3017 கோடி செலவில் 7 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 3500 வீடுகள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் வேலைவாய்ப்புக்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் எந்த வெளிநாட்டுக்குச் செல்கிறோமோ அந்த நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அறிந்து மாவட்ட ஆட்சியா் மூலமாக வெளிநாடு செல்ல வேண்டும். மேலும் பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்க தமிழக அரசின் பங்களிப்புடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் பாதுகாப்பான முறையில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. எனவே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறும் போலி முகவா்களை நம்பி ஏமாறாமல் அரசு அறிவித்துள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் 500 செவிலியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பிரிட்டன் நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செவிலியா்களுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு தோ்வு கட்டணத்தில் 25 சதவீதம் தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் போலி முகவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டு போலி முகவா்கள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது ஷகிரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

SCROLL FOR NEXT