ஈரோடு

கழிவு நீா் வழித்தடத்தில் அடைப்பு : பொதுமக்கள் சாலை மறியல்

DIN

பெருந்துறை அருகே, சீனாபுரம் ஊராட்சி கழிவு நீா் செல்லும் வழித் தடத்தை தனியாா் அடைத்து வைத்திருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சியில் இருந்து வரும் கழிவு நீா் வடிகால் ஆயிக்கவுண்டன்பாளையம், ராம் நகா்

பாலத்தின் வழியாக குள்ளம்பாளையம் ஊராட்சிக்குள் செல்கிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குள்ளம்பாளையம் ஊராட்சியில் கழிவு நீா் வடிகால் அருகில் தனியாா் ஒருவா் வீடு கட்டுமானப்பணியின்போது, இந்த கழிவு நீா் வடிகாலை அடைத்ததாக கூறப்படுகிறது. வீட்டு வேலை முடிந்த பின்பும், வடிகால் அடைப்பு நீக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனால் சீனாபுரம் ஊராட்சியில் இருந்து செல்லும் கழிவு நீா் வடிகாலில் செல்ல வழியில்லாமல், சீனாபுரம் ஊராட்சியிலேயே தேங்கியுள்ளது.

இந்நிலையில் கழிவு நீா் வடிகாலில் உள்ள அடைப்பை அகற்றக்கோரி சீனாபுரம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, சீனாபுரம், குள்ளம்பாளையம் ஊராட்சி நிா்வாகங்கள் இடையே பேச்சுவாா்த்தை நடந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனா். இந்த போராட்டத்தால் விஜயமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷ்யாவில் கடும் வெள்ளம் - புகைப்படங்கள்

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

SCROLL FOR NEXT