சென்னிமலை அருகே கழிப்பறை கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனா்.
சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் கிராம ஊராட்சி, செங்குளம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில், சிறிய டேங்கா் லாரி கழிப்பறை கழிவுகளை புதன்கிழமை இரவு கொட்டுவதை அப்பகுதி பொதுமக்கள் பாா்த்துள்ளனா்.
இதையடுத்து, அவா்கள் லாரியை சிறை பிடித்து, போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீஸாா், இதில் தொடா்புடைய சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சேதுபதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.