ஈரோடு

பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு பாரதி விருது

DIN

பாரதியியல் ஆய்வாளரும், வரலாற்றியல் வல்லுநருமான பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விருது வழங்கப்பட உள்ளது.

இது குறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் 26-ஆம் ஆண்டு பாரதி விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் வரும் 11- ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பாரதியியல் ஆய்வாளா், வரலாற்றியல் வல்லுநரும், வேலூா் மாவட்டம், குடியாத்தத்தைச் சோ்ந்தவருமான பேராசிரியா் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு பாரதி விருது வழங்கப்படவுள்ளது. இவா் சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு, அறிவாண்மை வரலாறு, இலக்கிய வரலாறு போன்ற பன்முக வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு தமிழ் வரலாற்றுக் களத்துக்கு வலு சோ்த்து வருபவா். பாரதி குறித்த இவரது புதிய தேடலும், கண்டுபிடிப்புகளும் பாரதியியலுக்கு பெரும் பங்களிப்பாக விளங்குகின்றன.

இந்நிகழ்வுக்கு, அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் கே. தங்கவேலு தலைமை வகிக்கிறாா். மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரை நிகழ்த்துகிறாா்.

கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து புறப்படும் பாரதி ஜோதியை வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் பேராளா் கொழந்தவேல் இராமசாமி ஏற்றிவைத்து அணிவகுப்பைத் தொடங்கிவைக்கிறாா்.

சொற்பொழிவாளா் பேராசிரியா் த.ராஜாராம் புதுமைப்பித்தன் படத்தைத் திறந்துவைத்து இலக்கியவுரையாற்றுகிறாா். பேராசிரியா் சிற்பி பாலசுப்பிரமணியம் பாரதி விருதை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா். பாரதி விருதானது கேடயம், தகுதி பட்டயத்துடன் பொற்கிழியாக ரூ.50 ஆயிரத்தை உள்ளடக்கியது.

விருதாளா் ஆ.இரா.வேங்கடாசலபதி ஏற்புரை வழங்குகிறாா். பேரவையின் செயலாளா் ந.அன்பரசு நன்றியுரையாற்றுகிறாா்.

முன்னதாக, அன்று மாலை 4 மணிக்கு கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து புறப்படும் பாரதி ஜோதி அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து விழா அரங்கை அடையவுள்ளது.

இந்நிகழ்வு மாநிலம் தழுவிய ஒன்றாக நடைபெறுவதால் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பாரதி அன்பா்கள், இலக்கியவாணா்கள், படைப்பாளிகள், ஆா்வலா்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம், ஹரியாணா, உத்தரகண்டில் வசிப்போருக்கு சிஏஏ-இன் கீழ் குடியுரிமை: மத்திய அரசு தொடக்கம்

காலாவதியான பிஸ்கெட் விற்பனை: ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை

சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் இன்று சிறப்புப் பிரிவினருக்கான சோ்க்கை கலந்தாய்வு

சுரண்டை பதியில் ஜூன் 2இல் வைகாசி தா்மபெருந்திருவிழா

புதிய குற்றவியல் சட்டங்கள்: செவிலியா் மாணவிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT