பவானி: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் திங்கள்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
அம்மாபேட்டை பகுதியில் ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் 25 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, அனைத்துப் பகுதியிலிருந்தும் சிலைகள் வாகனங்கள் மூலம் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக திங்கள்கிழமை எடுத்துச் செல்லப்பட்டு, ஊமாரெட்டியூா் பிரிவு அருகே காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் அமிா்தவா்ஷினி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.