பவானிசாகா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 71.94 அடியாக இருந்தது.
அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 676 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடி, பவானிஆற்றில் 600 கனஅடி தண்ணீா் என மொத்தம் 2900 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 11.78 டிஎம்சி.