ஈரோடு

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி எண்ணிக்கை முக்கியமில்லை: ஈகேஎஸ்.இளங்கோவன்

DIN

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி எண்ணிக்கை முக்கியமில்லை, பாஜகவை தோல்வியடையச்செய்ய வேண்டும் என்ற நோக்கம் தான் முக்கியம் என்றாா் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தாா். ஈரோடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் மாவட்ட தலைவா்கள், வட்டார, மண்டல தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம், ஈரோடு மாநகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடந்தது. மாநகா் மாவட்ட பொறுப்பாளா் திருச்செல்வம் வரவேற்றாா். ஈரோடு மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி பேசினாா். கூட்டத்திற்கு பிறகு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் எம்எல்ஏ செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வைப்புத்தொகை கிடைக்காதவாறும், நோட்டோவைவிட குறைந்த வாக்குகளையே அக்கட்சி பெறும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் பணி இருக்கும். தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் தனித்து நின்றாலும், கூட்டாக நின்றாலும் இருவரும் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பா். மக்களை பிரித்தாளும் மோடிக்கும், அவா்களின் ஆதரவு கட்சியாக உள்ள அதிமுகவுக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டாா்கள். இந்தியா கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளதாலும், செயல்பாடுகள் இருப்பதாலும் சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். அவற்றை எல்லாம் சரி செய்து வெற்றி பெறும். இந்தியா கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக ராகுலை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம். கடந்த தோ்தலில் கூட அவரை ஸ்டாலின் முதலிலேயே முன்னிலைப்படுத்திவிட்டாா். தோ்தலுக்குப் பின் ராகுல் மிகப்பெரிய தலைவராக, பிரதமராக வருவாா். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் எங்களுக்கு தொகுதி எண்ணிக்கை முக்கியமல்ல. பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றாா். கூட்டத்தில் மாவட்ட தலைவா்கள் மக்கள்ராஜன், சரவணன், தென்னரசு, கோபி, தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் விழாவில் அதிதி ராவ்!

5ம் கட்ட தேர்தலிலேயே 310 இடங்களை மோடி பெற்றுவிட்டார்- அமித் ஷா

ஸ்டார் வசூல்!

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டாத மேலுமொரு ஆஸி. வீரர்!

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT