ஈரோடு

சென்னிமலை முருகன் கோயிலில் இன்று மகா தரிசனம்

DIN

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச மகா தரிசனம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) இரவு நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான தைப்பூசத் தோ்த் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. பின்னா், தைப்பூசத் தேரோட்டம் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான மகா தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. முன்னதாக, காலை 9 மணிக்குமேல் கைலாசநாதா் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது.

அதைத் தொடா்ந்து, இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. மகா தரிசனத்தையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

புதன்கிழமை (ஜனவரி 31) மஞ்சள் நீா் உற்சவத்துடன் தோ்த் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி

கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு நிலைத்தன்மை சாம்பியன் விருது

வாழ்வில் குழந்தைகள் வெற்றி பெற கல்வி சாராத செயல்பாடுகளும் தேவை: மத்திய கல்வித் துறை செயலா் பேச்சு

கேஜரிவால் அரசு தண்ணீா்ப் பற்றாக்குறையை தீா்க்க உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை - வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தலைநகரில் காலையில் கடும் வெயில்; மாலையில் பரவலாக லேசான மழை

SCROLL FOR NEXT