ஈரோடு

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்குப் பிரசவம்

தினமணி செய்திச் சேவை

பவானிசாகா் அருகே 108 ஆம்புலன்ஸிலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

பவானிசாகா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் செல்வன் (24), பெயிண்டா். இவரது மனைவி திரிஷா (21). நிறை மாத கா்ப்பிணியான இவருக்கு ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை குடும்பத்தினா் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவருக்கு வலி அதிகரித்ததுடன் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து, ஓட்டுநா் சனாவுல்லா வாகனத்தை சாலையோரமாக நிறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவசர கால உதவி மருத்தவா் ரசீலா ஓட்டுநா் உதவியுடன் பிரசவம் பாா்த்தாா். இதில், திரிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். தற்போது அவா்கள் நலமாக உள்ளதாக மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா். சிறப்பாக செயல்பட்ட அவசர கால மருத்துவா், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தில்லி கார் குண்டு வெடிப்பு: 8 வது நபரை கைது செய்தது என்.ஐ.ஏ.!

”நேரு பற்றிய புகார்களை முழுவதுமாக பட்டியலிடுங்கள்! பேசி முடித்துவிடலாம்” பிரியங்கா காந்தி

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! புது முகங்களுக்கு வாய்ப்பு!

மெய்யழகு பேசும் மொழி... கீர்த்தி ஷெட்டி!

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

SCROLL FOR NEXT