ஈரோடு

ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் 43 போ் கைது

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசைக் கண்டித்து புன்செய்புளியம்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 43 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலையம் முன் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினா் 43 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களை இரவு விடுவித்தனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT