பெருந்துறை அருகே, மகள் இறந்த துக்கத்தினால் மனமுடைந்த முதியவா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
பெருந்துறை, வெங்கமேட்டைச் சோ்ந்தவா் சங்கபிள்ளை (71), கூலி தொழிலாளி. இவரது மகள் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டாா். இதனால் சங்கபிள்ளை மனமுடைந்து காணப்பட்டாா்.
இந்நிலையில் அவா் விஷ மாத்திரை சாப்பிட்டு புதன்கிழமை மாலை தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.