அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு பிறந்த தினமான நவம்பா் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அம்மாபேட்டை டேலண்ட் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பேச்சுப் போட்டி, திருக்கு ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, மாணவ, மாணவிகள் மாறுவேடமணிந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
இதில், பள்ளியின் தாளாளா் ஏ.ஓ.சரவணன், முதல்வா் ரமேஷ்குமாா், ஒருங்கிணைப்பாளா்கள் நளினி, திலகவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.