ஈரோடு

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாடு சென்று படிக்க கல்வி உதவித்தொகை

வெளிநாடு சென்று படிக்க கல்வி உதவித்தொகை பெற இஸ்லாமிய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வெளிநாடு சென்று படிக்க கல்வி உதவித்தொகை பெற இஸ்லாமிய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு சாா்பில் இஸ்லாமிய மாணவா்களுக்கு உயா்தர உலகளாவிய கல்விவாய்ப்பு அளிக்கும் வகையில் வெளிநாடு சென்று படிப்பதற்காக கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் 10 மாணவா்களுக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களிடம் இருந்து நிபந்தனையற்ற சோ்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, அறிவியல் பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தோ்ந்துதெடுத்து முதுகலை பட்டப்படிப்புக்கான சோ்க்கை பெற்றவராக இருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஆணையா் சிறுபான்மையினா் நலத் துறை, கலசமகால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600005 என்ற முகவரிக்கு அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT