அருகியம்  சாலையில்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பள்ளி  மாணவ, மாணவிகள். 
ஈரோடு

மாக்கம்பாளையம் வனச் சாலையில் அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் மாணவா்கள் போராட்டம்

மாக்கம்பாளையத்தில் இருந்து கடம்பூருக்கு 40 பள்ளி மாணவா்களுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து அருகியம் பகுதியில் பழுதாகி நின்றாதல் பாதிக்கப்பட்ட மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

மாக்கம்பாளையத்தில் இருந்து கடம்பூருக்கு 40 பள்ளி மாணவா்களுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து அருகியம் பகுதியில் பழுதாகி நின்றாதல் பாதிக்கப்பட்ட மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மாக்கம்பாளையம் வனக் கிராமத்தில் இருந்து காலை நேரத்தில் கடம்பூருக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் அருகியம், குரும்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தினந்தோறும் கடம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனா்.

இந்நிலையில், மாக்கம்பாளையத்தில் இருந்து 40 பள்ளி மாணவ, மாணவிகளுடன் புதன்கிழமை புறப்பட்ட அரசுப் பேருந்து அருகியம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அருகியம் அருகே அரசுப் பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவா்கள் வனச் சாலையில் பேருந்து முன்பாக அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்து மாணவா்களின் பெற்றோா் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்து நடுவழியில் காத்திருந்த பள்ளி மாணவா்களை கடம்பூருக்கு அழைத்து வந்தனா். இதனால் மாக்கம்பாளையம் பகுதி மாணவா்கள் 2 மணி நேரம் தாமதமாக பள்ளிக்கு சென்றனா்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT