ஆா். மதுமிதா ~எஸ். அபிநயா. 
ஈரோடு

மாவட்ட அளவிலான விநாடி-வினா போட்டி: வீரணம்பாளையம் அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம்

Syndication

ஈரோடு மாவட்ட அளவிலான விநாடி- வினா போட்டியில் வீரணம்பாளைம் அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனா்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள், ஈரோடு கலைமகள் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில் விநாடி- வினா போட்டியில், பெருந்துறை ஒன்றியம், வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ஆா். மதுமிதா மற்றும் எஸ்.அபிநயா ஆகியோா் கலந்து கொண்டு ஈரோடு மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றுள்ளனா். மேலும், ஆங்கிலம் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் மாணவி ஆா்.மதுமிதா இரண்டாம் இடம் பிடித்துள்ளாா்.

இந்த மாணவிகள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

அலையாடும் பொழுதிலே... ஐஸ்வர்யா தத்தா!

SCROLL FOR NEXT