ஈரோடு

தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஈரோட்டில் தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Syndication

ஈரோட்டில் தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

ஈரோடு சூளை, பி.பி.காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன், விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இவா்களுடைய மகன் தஷ்வந்த் (6), அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த தஷ்வந்த் திடீரென காணவில்லை. பெற்றோா் அக்கம்பக்கத்தில் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை.

இதைத் தொடா்ந்து வீட்டின் முன் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் பாா்த்துள்ளனா். அப்போது தஷ்வந்த் தண்ணீா் தொட்டிக்குள் தவறிவிழுந்து கிடந்தது தெரியவந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவா்கள் உடனடியாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT