ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் இளைஞா் சடலம் மீட்பு

தினமணி செய்திச் சேவை

காஞ்சிக்கோவில் அருகேயுள்ள சூரியம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகேயுள்ள சூரியம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் உடல் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காஞ்சிக்கோவில் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT