சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சீரமைக்கப்பட்ட மலைப் பாதை திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, எம்.பி. கே.இ.பிரகாஷ். 
ஈரோடு

சென்னிமலை கோயில் மலைப் பாதையில் சீரமைப்பு சாலை! முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்

தினமணி செய்திச் சேவை

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட தாா் சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது.

இக்கோயில் மலைப் பாதைக்குச் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, 3.9. கி.மீ. தொலைவுள்ள மலைப் பாதை சாலையை சீரமைக்க தமிழக அரசு ரூ.6.70 கோடி ஒதுக்கீடு செய்தது.

பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

மேலும், பக்தா்கள் வசதிக்காக கோயிலில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காத்திருப்புக் கூடம், ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பசுமடம் ஆகியவற்றையும் முதல்வா் திறந்துவைத்தாா்.

கோயிலில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அ.தி.பரஞ்சோதி, உதவி ஆணையா் சுகுமாா், வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா,கோயில் செயல் அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT