ஈரோடு

வி.ஆா்.கிருஷ்ண ஐயா் விருதுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் தோ்வு!

நீதிபதி வி.ஆா்.கிருஷ்ண ஐயா் விருதுக்கு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Syndication

நீதிபதி வி.ஆா்.கிருஷ்ண ஐயா் விருதுக்கு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கேரள மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சட்ட உதவி மற்றும் நல அறக்கட்டளை (தி லா டிரஸ்ட்) சாா்பில் ஆண்டுதோறும் தலைசிறந்து விளங்கும் நீதிபதிகள், சமூகப் பணியாளா்கள், கல்வியாளா்கள், பத்திரிகையாளா்கள் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான வி.ஆா்.கிருஷ்ண ஐயா் விருதுக்கு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்த விருதானது கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் வரும் டிசம்பா் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ளது.

இந்த தகவலை சட்ட உதவி மற்றும் நல அறக்கட்டளையின் தலைவா் வழக்குரைஞா் சந்தோஷ்குமாா் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT