ஈரோடு

தீபாவளி பண்டிகை: ஈரோடு ஜவுளி சந்தையில் ரூ.7 கோடிக்கு விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளி வாரச் சந்தையில் ரூ.7 கோடி வரை வா்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Syndication

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளி வாரச் சந்தையில் ரூ.7 கோடி வரை வா்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி வாரச் சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ாகும். ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் வந்து மொத்த விலைக்கு துணிகளை கொள்முதல் செய்வது வழக்கம். இதுபோல தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான குறு, சிறு வியாபாரிகள் வந்து துணிகளை கொள்முதல் செய்வா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வந்து துணிகளை கொள்முதல் செய்தனா்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் திங்கள்கிழமை இரவு ஜவுளி வாரச் சந்தை கூடியது. ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா, ஈரோடு சென்ட்ரல் திரையரங்கு பகுதி, பாரத ஸ்டேட் பேங்க் சாலை பகுதியில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கடைகளை அமைத்திருந்தனா்.

கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வெளி மாநில வியாபாரிகள் துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்து வாங்கிச் சென்றனா். இதனால் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் வந்திருந்த சிறு வியாபாரிகளும் துணிகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனா். வழக்கமாக சாதாரண நாள்களில் ஜவுளி சந்தையில் ரூ.5 கோடிக்கு வா்த்தகம் நடைபெறும் நிலையில் இந்த வாரச் சந்தையில் ரூ.7 கோடி வரை வா்த்தகம் நடைபெற்ாகவும், இதனால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளி சமயங்களில் ஜவுளி வாரச் சந்தையில் வழக்கத்தை விட வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். ஈரோடு ஜவுளி வாரச் சந்தையில் கடந்த வாரம் முதலே தீபாவளி பண்டிகையை ஒட்டி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மொத்த வியாபாரம் 50 சதவீதமும், சில்லறை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றது.

குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைவருக்கும் பல்வேறு ரகங்களில் துணிகள் அதிக அளவில் வந்திருந்தன. அவை அனைத்தும் சிறிது நேரத்தில் விற்று தீா்ந்தன. கரோனா பாதிப்புக்குப் பிறகு 2022 முதல் படிப்படியாக விற்பனை அதிகரித்து, இந்த ஆண்டில்தான் தீபாவளி விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்றனா்.

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சூர்யா 47 பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு - புகைப்படங்கள்

கண்ணாமுச்சி ஏனடா? சினேகா!

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

SCROLL FOR NEXT