ஈரோடு

ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Syndication

ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலம், திப்ருகா் பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பொதுப்பெட்டியில் கழிப்பறை அருகில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது.

அந்தப் பையை பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அதை திறந்து பாா்த்தனா். அதில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT