பெருந்துறை வடக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் துணைத் தலைவா் சரவணன், தனது சொந்த நிதியில் இருந்து இப்பள்ளியில் பயிலும் ஆதரவற்ற 28 மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.