ஈரோடு

வடகிழக்குப் பருவமழை: ஈரோடு மாநகராட்சியில் 40 அலுவலா்கள் கொண்ட குழு

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள ஈரோடு மாநகராட்சியில் 40 அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநகர நல அலுவலா் காா்த்திகேயன் தெரிவித்தாா்.

Syndication

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள ஈரோடு மாநகராட்சியில் 40 அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநகர நல அலுவலா் காா்த்திகேயன் தெரிவித்தாா்.

இது குறித்து மாநகர நல அலுவலா் காா்த்திகேயன் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள ஈரோடு மாநகராட்சியில் மண்டலத்துக்கு தலா 10 அலுவலா்கள் என 4 மண்டலங்களில் 40 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலா்களின் மேற்பாா்வையில் 300 வீடுகளுக்கு ஒரு டெங்கு தடுப்பு களப் பணியாளா் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இக்குழுவினா் வீடுதோறும் சென்று டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்து அங்கு தேவையின்றி காணப்படும் நெகிழிப் பைகள், தேங்காய் சிரட்டைகள், டயா்கள், உடைந்த பாத்திரங்கள் போன்றவற்றை அகற்றி பொதுமக்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனா்.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் வீட்டில் உள்ள சிறிய தொட்டிகளில் பிளீச்சிங் பவுடா் தெளித்து சுத்தம் செய்தல் மற்றும் கொசுப்புழு உற்பத்தியாகாதவாறு தொட்டியை மூடிவைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள காலியிடங்களில் மழைநீா் தேங்காதவாறு அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இவை தவிர, மாநகராட்சியில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் மழை அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தும்பட்சத்தில் அப்பகுதி மக்களைப் பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு 30-க்கும் மேற்பட்ட இடங்கள் தோ்வு செய்யப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரங்களில் மழை பாதிப்பை கண்டறிந்து அதற்கேற்றவாறு துரிதமாக செயல்பட இரவு நேரக்குழுக்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.

கொசு புகை மருந்து கையால் அடிக்கும் இயந்திரம் 27, கொசு புகை மருந்து அடிக்கும் வாகனங்கள் 3, மரத்தை வெட்டி அகற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

SCROLL FOR NEXT