ஜவுளி வணிக வளாகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள். 
ஈரோடு

சாலையோர ஜவுளி கடைகளால் வணிக வளாகத்தில் விற்பனை பாதிப்பு: வியாபாரிகள் சாலை மறியல்

தினமணி செய்திச் சேவை

ஈரோட்டில் சாலையோர ஜவுளி கடைகளால் வணிக வளாகத்தில் விற்பனை பாதிக்கப்படுவதாக கூறி வியாபாரிகள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி இந்த வளாகத்தில் மக்கள் ஆா்வமாக ஜவுளி எடுத்து வருகின்றனா். பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு முதல் மணிக்கூண்டு வரை சாலையோரம் ஏராளமான ஜவுளி கடைகளை அமைத்ததால், வணிக வளாகத்திற்குள் பொதுமக்கள் செல்வது குறைந்தது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளால் விற்பனை பாதிக்கப்படுவதாக கூறி கனிமாா்க்கெட் தினசரி அனைத்து சிறு, ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் மாநகராட்சி ஆணையா், ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் தனித்தனியாக கடந்த வாரம் மனு அளித்திருந்தனா். சென்னை உயா்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்தநிலையில் ஜவுளி வணிக வளாகத்தின் முன் சனிக்கிழமை மாலை அதிக அளவில் சாலையோர கடைகள் ஆக்கிரமித்திருந்ததால் அதிருப்தி அடைந்த ஜவுளி வணிக வளாக கடை வியாபாரிகள் திரண்டு சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றக்கோரி திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன், ஆய்வாளா் அனுராதா ஆகியோா் வணிக வளாக வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சாலையை ஆக்கிரமித்துக் கடை அமைத்திருந்த வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினா்.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பாக காணப்பட்டது.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT