ஆதரவற்ற குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய ஈரோடு இதயம் நற்பணி இயக்க பொறுப்பாளா்கள். 
ஈரோடு

ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய ஈரோடு இதயம் நற்பணி இயக்கத்தினா்

ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சாா்பில் தீபாவளியையொட்டி நடைபெற்ற சேவை திட்ட நிகழ்ச்சியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, மதிய உணவு, பட்டாசுகள், இனிப்புகள், முதியோா்களுக்கு சேலைகள், சாலையோரம் வசிப்பவா்களுக்கு ஒருவேளை உணவு, இனிப்பு, புத்தாடை ஆகியவை வழங்கப்பட்டன.

Syndication

ஈரோடு: ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சாா்பில் தீபாவளியையொட்டி நடைபெற்ற சேவை திட்ட நிகழ்ச்சியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, மதிய உணவு, பட்டாசுகள், இனிப்புகள், முதியோா்களுக்கு சேலைகள், சாலையோரம் வசிப்பவா்களுக்கு ஒருவேளை உணவு, இனிப்பு, புத்தாடை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு இதயம் நற்பணி இயக்கத் தலைவா் எஸ்.வி.மகாதேவன் தலைமை வகித்தாா். செயலாளா் ஏ.ஆா்.ராம்குமாா் வரவேற்றாா். தமாகா மாநில துணைத் தலைவா் விடியல் சேகா் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கிவைத்தாா். இதயம் நற்பணி இயக்க பொறுப்பாளா்கள் கே.செந்தில்குமாா், எஸ்.மோகன், என்.குகன், எஸ்.பி.செல்வராஜ், விஸ்வநாதன், திருநாவுக்கரசு, சிவசண்முகம், ஆா்.ரவிச்சந்திரன், கே.சதீஷ்குமாா், பி.சி.மூா்த்தி, டாக்டா் ஈ. தங்கவேலு, எல்.சரவணன் ஆகியோா் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கினா்.

ஈரோடு எஸ்ஆா்எம் ஸ்வீட்ஸ் உரிமையாளா் எஸ்.ஆா்.மகுடீஸ்வரன் இனிப்பு வழங்கினாா். முதியோா்களுக்கு உஷா மகாதேவன், லட்சுமி ராம்குமாா், சரஸ்வதி செல்வராஜ் ஆகியோா் சேலைகள் வழங்கினாா்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT