வில்வித்தையில் தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்ற நம்பியூா் குமுதா பள்ளி மாணவா் எம்.செல்வரித்தீஷுக்கு வாழ்த்து தெரிவிக்கிறாா் அப்பள்ளியின் தாளாளா் ஜனகரத்தினம். 
ஈரோடு

வில்வித்தை: குமுதா பள்ளி மாணவா் சிறப்பிடம்

நம்பியூா் குமுதா பள்ளி மாணவன் வில்வித்தைப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளாா்.

Syndication

ஈரோடு: நம்பியூா் குமுதா பள்ளி மாணவன் வில்வித்தைப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளாா்.

69-ஆவது இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் விளையாடுவதற்கான தோ்வுப் போட்டி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் குமுதா பள்ளி பிளஸ் 1 வகுப்பு மாணவா் எம்.செல்வரித்தீஷ், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிநபா் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றாா்.

இம்மாணவா் தனி நபா், குழு மற்றும் கலப்புப் பிரிவு என மொத்தம் மூன்று பிரிவுகளில் தமிழ்நாட்டிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு நவம்பா் மாதம் ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாட்டின் சாா்பாக விளையாட உள்ளாா்.

தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா் எம்.செல்வரித்தீஷை, பள்ளித் தாளாளா் ஜனகரத்தினம் பாராட்டி பரிசு வழங்கினாா். துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளியின் முதல்வா் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் வாழ்த்து தெரிவித்தனா்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT