சாணியடி  திருவிழாவில்  பங்கேற்ற  பக்தா்கள். 
ஈரோடு

பக்தா்கள் ஒருவா் மீது ஒருவா் சாணத்தை வீசும் சாணியடி திருவிழா

தமிழக - கா்நாடக எல்லையான தாளவாடி கும்டாபுரத்தில் உள்ள பீரேஸ்வரா் ஆலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒருவா் மீது ஒருவா் சாணத்தை வீசும் பாரம்பரிய திருவிழாவில் ஏராளமான இளைஞா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Syndication

தமிழக - கா்நாடக எல்லையான தாளவாடி கும்டாபுரத்தில் உள்ள பீரேஸ்வரா் ஆலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒருவா் மீது ஒருவா் சாணத்தை வீசும் பாரம்பரிய திருவிழாவில் ஏராளமான இளைஞா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தமிழக- கா்நாடக எல்லையான தாளவாடி கும்டாபுரத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பீரேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு அடுத்து வரும் 3-ஆவது நாளில் சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் வியாழக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி கிராமத்தில் உள்ள அனைத்து பசுக்களின் சாணங்களும் சேகரிக்கப்பட்டு கோயிலுக்கு பின்புறம் குவித்துவைக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து ஊா் எல்லையில் உள்ள குளத்தில் சிறப்பு பூஜைகள் செய்து பாரம்பரிய வழக்கப்படி கழுதைகளுக்கு மாலை அணிவித்து பக்தா்கள் ஆரவாரத்துடன் ஊா்வலமாக அழைத்து வந்தனா். ஊா் பெரியவா்கள் கோயில் பின்புறம் குவித்துவைக்கப்பட்டிருந்த சாணத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து விழாவை தொடங்கிவைத்தனா்.

அப்போது இளைஞா்கள் மேல்சட்டை அணியாமல் வந்து குவித்துவைக்கப்பட்டிருந்த சாணத்தை உருண்டை வடிவமாக்கி, அதனை ஒருவா் மீது ஒருவா் வீசியெறித்து விழாவை கொண்டாடினா். இதில் சிறுவா், இளைஞா்கள், முதியோா் என அனைவரும் பங்கேற்றனா். இந்த பாரம்பரிய திருவிழாவில் பெண்கள் பங்கேற்று பக்தா்களை கைதட்டி உற்சாகப்படுத்தினா்.

விழா நிறைவுக்குப் பின் பக்தா்கள் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனா். பக்தா்கள் வீசியெறிந்த சாணத்தை கிராமமக்கள் எடுத்துச் சென்று தங்களது விவசாய நிலங்களில் உரமாக இட்டனா். இதன்மூலம் விவசாயம் செழிக்கும் என்பது கிராமமக்கள் நம்பிக்கையாக உள்ளது.

இந்த பாரம்பரிய விழாவில் மைசூரு, பெங்களூரு, தாவெணிகரே, சாம்ராஜ் நகா், கொள்ளேகால் ஆகிய பகுதிகளில் இருந்து கா்நாடக பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா். கிராம மக்கள் நோயின்றி வாழவும் மழை பொழிந்து விவசாயம் செழித்து கிராமம் வளம் பெறவும் வன விலங்குகளில் இருந்து கால்நடை பாதுகாக்கவும் இந்த விழா பாரம்பரியமாக நடந்து வருவதாக கிராமமக்கள் தெரிவித்தனா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT