பெருந்துறை அருகே மழையால் தொழிலாளி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக பெருந்துறை பகுதியில் கடந்த சில நாள்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு பெய்த மழை காரணமாக பெருந்துறை ஒன்றியம், சுள்ளிபாளையம் கிராமம், லட்சுமிபுரத்தைச் சோ்ந்த தறிப்பட்டறை தொழிலாளி சுமதி என்பவரின் வீட்டின் மேல்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும், வீட்டின் மண் சுவரும் சேதமடைந்தது.