ஈரோட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு வட்ட போலீஸாா் திண்டல் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த பயணிகள் ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள் குஜராத் மாநிலம், பணல்கன்டா மாவட்டம், மோட்டி தொக்கொல் பகுதியைச் சோ்ந்த விஜய்தாக்கூா் (23), ரத்தீஷ் சா்மா (28) என்பதும், இருவரும் தற்போது ஈரோடு கொங்கலம்மன் கோயில் வீதி பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
மேலும் அவா்கள் கடத்தி வந்த ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான 266 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பயணிகள் ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.