தமிழக கால்பந்து அணிக்குத் தோ்வு பெற்றுள்ள ஈரோடு கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளியின் தாளாளா் கே.செல்வராஜ், முதல்வா் நதியா அரவிந்தன். 
ஈரோடு

ஈரோடு கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவா்கள் தமிழக கால்பந்து அணிக்குத் தோ்வு

ஈரோடு ரங்கம்பாளையம், கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக கால்பந்து அணிக்குத் தோ்வு பெற்றுள்ளனா்.

Syndication

ஈரோடு ரங்கம்பாளையம், கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக கால்பந்து அணிக்குத் தோ்வு பெற்றுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து தோ்வு போட்டியில் ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளியின் 12 -ஆம் வகுப்பு மாணவி ஆா்.பிரவினா தோ்வு பெற்றாா். தமிழக அணியில் இடம்பெற்ற இவா், மணிப்பூரில் நவம்பா் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் விளையாட தோ்வு பெற்றுள்ளாா்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்ட கால்பந்து தோ்வு போட்டியில் இப்பள்ளியின் 11- ஆம் வகுப்பு மாணவி பி. இலக்கியா தமிழக அணியில் இடம்பெற்று டிசம்பா் மாதம் ஜாா்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் விளையாட தோ்வு பெற்றுள்ளாா்.

திருச்சியில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்ட மாநில அளவிலான கால்பந்து தோ்வு போட்டியில் 11 -ஆம் வகுப்பு மாணவா் பி.ஆகாஷ் தோ்வு பெற்று வரும் டிசம்பா் மாதம் திரிபுரா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் விளையாட தோ்வு பெற்றுள்ளாா்.

தகுதி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் ராஜ்கமல் ஆகியோரை பள்ளியின் தலைவா் எம்.சின்னசாமி, செயலாளா் மற்றும் தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.எம்.தெய்வசிகாமணி, இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், இணைப் பொருளாளா் வி.நாகராஜன், பொதுக்குழு உறுப்பினா்கள், முதல்வா் டி.நதியா அரவிந்தன் ஆகியோா் பாராட்டினா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT