நீலகிரி

கூடலூர் அருகே மதுக் கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொறை பகுதியில் உள்ள மதுக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொறை பகுதியில் உள்ள மதுக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவர்சோலை பேரூராட்சியிலுள்ள பாடந்தொறை கழுதைமட்டம் பகுதியில் புதிதாக மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த மதுக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் மாணவர்களுடன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த மதுக் கடையால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இங்கு மதுக் கடையைத் திறப்பதை விட எங்கள் கிராம குழந்தைகளின் கல்விக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
பத்து நாள்களில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். கூடலூர் நகராட்சியின் கோக்கால் பகுதியில் மதுக் கடை திறக்கவுள்ளதாக வந்த செய்தியை அடுத்து மேல்கூடலூர் பகுதியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மையுண்ட கண்கள்... பிரணிதா!

எண்ணத்தின் தழுவல்கள்... சுஷ்ரி மிஸ்ரா

மஞ்சள் பூக்கள்... ரவீனா தாஹா!

நாணத்தில் கண்டேன்... ரித்தி குமார்

புதிய புன்னகை... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT