நீலகிரி

வெலிங்டன் கன்டோண்மென்ட் பள்ளிகளுக்கான பேருந்து வசதி நிறுத்தம்: போர்டு உறுப்பினர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குன்னூர், வெலிங்டன் கன்டோண்மென்ட் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவசப் பேருந்து வசதி திடீரென நிறுத்தப்பட்டதால், அதன் போர்டு

DIN

குன்னூர், வெலிங்டன் கன்டோண்மென்ட் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவசப் பேருந்து வசதி திடீரென நிறுத்தப்பட்டதால், அதன் போர்டு உறுப்பினர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வெலிங்டன் கன்டோண்மென்ட் நிர்வாகத்தின்கீழ், தமிழ் வழிக் கல்வியில் பத்தாம் வகுப்பு வரையும், ஆங்கில வழிக் கல்வியில் 9-ஆம் வகுப்பு வரையிலும் இரண்டு பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக கன்டோண்மென்ட் நிர்வாகம் சார்பில் இலவச வாகன வசதி, சீருடை, புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இப்பகுதியிலுள்ள 7 வார்டுகளை சேர்ந்த  குழந்தைகள் மட்டுமின்றி கன்டோண்மென்ட் பகுதியை ஒட்டியுள்ள குழந்தைகள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் இப்பள்ளிகளில் படித்து வருகின்றனர்.  
இந்த ஆண்டு, திடீரென்று பள்ளிக்கான வாகன வசதி ரத்து செய்யப்படுவதாக கன்டோண்மென்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், 300-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கன்டோண்மென்ட் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
இப்பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளர்கள் ஆவர். கன்டோண்மென்ட் நிர்வாகம் சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக  14 வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது திடீரென்று வாகன வசதியை தற்போது ரத்து செய்துள்ளார்கள். எங்களின் நிலை கருதி பள்ளிப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். தவறும்பட்சத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்படும் என்றனர்.
இதைத் தொடர்ந்து, கன்டோண்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ்வர்மா, போர்டு உறுப்பினர்கள் துரைராஜ், சிவகுமார், செபாஸ்டியன், முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கன்டோண்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ்வர்மா கூறியதாவது:
வெலிங்டன் கன்டோண்மென்ட் நிர்வாகம் சார்பில்  14 பேருந்துகளை இயக்கி வந்தோம். அதற்கான நிதியை புணேவிலுள்ள தலைமை அலுவலகம் கொடுத்து வந்தது. இந்த வாகனங்களுக்காக மாதம் ரூ. 14 லட்சம் வீதம் ஆண்டுக்கு ஒன்றரை கோடி கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், புணே தலைமை அலுவலகத்திலிருந்து வாகனத்துக்காக நிதியை நிறுத்தியுள்ளனர். குழந்தைகளின் நலனுக்காக நிதியை ஒதுக்க வேண்டும் என்று பலமுறை கடிதம் அனுப்பியும் அவர்கள் நிதி ஓதுக்க மறுக்கின்றனர். இதன் காரணமாகவே
பள்ளி வாகனங்களை இயக்கத்தை தாற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். இதுகுறித்து பெற்றோர்களுக்கு கடந்த 20 நாள்களுக்கு முன்பே தகவல் தெரிவித்தோம். தற்போதைய சூழலில்  ஒரு மாணவனுக்கு ரூ. 500 கட்டணம் வசூலித்தாலும் மாதத்துக்கு ரூ. 4 லட்சம்தான் கிடைக்கும். மீதியுள்ள பத்து லட்சம் பற்றாக்குறையாக உள்ளது.
எனவே, கன்டோண்மென்ட் பகுதியில் இருக்கும் மாணவர்கள் மட்டும் பயன்பெறும் வகையில் இரண்டு பேருந்துகளுக்கு அனுமதி கேட்டுள்ளோம். மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகத்திடம் பேசி பள்ளி நேரத்துக்கு பேருந்தை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT