நீலகிரி

ட்ரூக் எஸ்டேட் பகுதியில் சாலை வசதி கோரி பொது மக்கள் போராட்டம்

உலிக்கல் போரூராட்சிக்கு உள்பட்ட ட்ரூக் எஸ்டேட் பகுதியில்  சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பொது மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

DIN

உலிக்கல் போரூராட்சிக்கு உள்பட்ட ட்ரூக் எஸ்டேட் பகுதியில்  சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பொது மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட ட்ரூக், பக்காசூரன் மலை கிராமம், டேன்-டீ குடியிருப்புப் மற்றும் ஆதிவாசி கிராமமான செங்கல்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ட்ரூக் எஸ்டேட் பகுதியில் முறையான சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் உலிக்கல் பேரூராட்சி, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு மனு அளித்து வந்துள்ளனர்.
ஆனால், இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் அப்பகுதி மக்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினர், 15 நாளில் சாலை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT