நீலகிரி

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: கேரள சிறையில் உள்ள இருவருக்கு: மே 31 வரை காவல் நீட்டிப்பு

கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில், கேரள சிறையில் உள்ள இருவருக்கு மே 31 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து கோத்தகிரி நடுவர் நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டார்.

DIN

கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில், கேரள சிறையில் உள்ள இருவருக்கு மே 31 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து கோத்தகிரி நடுவர் நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டார்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 6 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் மஞ்சேரி சிறையில் ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி ஆகிய இருவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் கடந்த 5-ஆம் தேதி கோத்திகிரி நீதிமன்றத்தில் தமிழக போலீஸார் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர், அவர்களை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகு கோத்திகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் இருவரையும் 17-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு கோத்தகிரி நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து அவர்கள் கேரள சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கேரள சிறையில் உள்ள ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி ஆகிய இருவரையும் கேரள போலீஸாரும், அம்மாநில சிறப்பு அதிரடி படையினரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவந்து கோத்தகிரி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரிடமும் விசாரித்த நீதிபதி ஸ்ரீதர், அவர்களை மீண்டும் மே 31-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். அதையடுத்து, அவர்கள் இருவரும் பலத்த பாதுகாப்புடன் கேரள சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT