குன்னூர் தேயிலை ஏல மையத்தில் கடந்த எட்டு மாதங்களில் ரூ. 342.15 கோடிக்கு தேயிலைத் தூள் விற்பனையாகியுள்ளதாக தேயிலை ஏல மையம் தெரிவித்துள்ளது.
குன்னூர் தேயிலை ஏல மையத்தில் நடப்பு ஆண்டில் 34 ஏலங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஜூலையில், உள்நாட்டு வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நடைமுறையில் உள்ள "பில்லிங்' முறையை மாற்றக் கோரி ஏலத்தில் பங்கேற்கவில்லை.
இதனால், 5 சதவீதம் தேயிலை மட்டுமே ஏலம் போனது. ஆகஸ்ட் மாதத்தில் 54 சதவீதம் விற்பனையாகவில்லை. இதன்காரணமாக தேயிலைத் தூள் தேக்கமானதால் "பாட் லீஃப்' தொழிற்சாலைகள் உற்பத்தியை ஒரு வாரம் நிறுத்தி வைத்தன.
இதுவரை நடைபெற்ற 34 ஏலங்களிலும் மொத்தம் 3.87 கோடி கிலோ தேயிலை விற்பனையாகி, ரூ. 342.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 3.21 கோடி கிலோ விற்பனையாகி, ரூ. 307.23 கோடி வருவாய் கிடைத்தது.
இதை ஒப்பிடுகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 34.92 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக தேயிலை ஏல மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.