நீலகிரி

கைகாட்டி - மஞ்சக்கம்பை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கைகாட்டியில் இருந்து மஞ்சக்கம்பை பகுதிக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

DIN

கைகாட்டியில் இருந்து மஞ்சக்கம்பை பகுதிக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கைகாட்டியில் இருந்து மஞ்சக்கம்பை செல்லும் சாலையில் ஆலாட்டனை, மேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு, 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மேற்படி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு மஞ்சூர், உதகை, குன்னூர் போன்ற பகுதிகளுக்கே சென்றுவர வேண்டியுள்ளது.
இந்நிலையில், கைகாட்டி - மஞ்சக்கம்பை சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், அந்தச் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.   
எனவே, கைகாட்டி-மஞ்சக்கம்பை சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT