நீலகிரி

பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு: உதகையில் விழிப்புணர்வு முகாம்

உதகையில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பாதுகாப்புடன் கையாள்வது குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

உதகையில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பாதுகாப்புடன் கையாள்வது குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 உதகை அருகே உள்ள மீக்கேரி கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடக்கிவைத்துப் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காய்கறிப் பயிர்கள், பழங்கள்,  வாசனை திரவியப் பயிர்கள்,  மலர்கள்,  மூலிகைப் பயிர்கள் என அனைத்து வகையான பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றன.
 இந்தக் காய்கறிகளை நேரடியாக உணவாக உண்பதால், இதற்குப் பயன்படுத்தப்படும்  உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி  மருந்துகளில் உள்ள ரசாயனப் பொருள்களில் உள்ள நச்சுத் தன்மை மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குகின்றன. எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக நச்சுத் தன்மை கொண்ட ரசாயனக் கொல்லிகள், அதிக அளவிலான உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல் இயற்கையாக தயாரிக்கப்படும் உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்து மகசூலை பெருக்கலாம் என்றார்.
 அதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை, பாதுகாப்பு உபகரணங்களையும் ஆட்சியர் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பெருமாள், தோட்டக் கலைத் துணை இயக்குநர் உமாராணி, உதவி இயக்குநர் மீராபாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 மீக்கேரியைத் தொடர்ந்து, செப்டம்பர் 6-ஆம் தேதி கூக்கல் பகுதியிலும்,  7-ஆம் தேதி தேனாடு, மாங்குழி, குந்தசப்பை பகுதிகளிலும்,  13-ஆம் தேதி  மஞ்சூர், பிக்கோல் பகுதிகளிலும்,  14-ஆம் தேதி பிக்கட்டி பகுதியிலும், 15-ஆம் தேதி கெரடா பகுதியிலும், 19-ஆம் தேதி சோலூர் பகுதியிலும்,  21-ஆம் தேதி இத்தலார் பகுதியிலும்,  26-ஆம் தேதி கடநாடு பகுதியிலும் இந்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT