கூடலூரை அடுத்துள்ள பெண்ணை வனப் பகுதியிலுள்ள பழங்குடி மக்களின் பிள்ளைகளை உயா்கல்வி பயில கல்வி அலுவலா் அறிவுரை திங்கள்கிழமை வழங்கினாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பெண்ணை வனப் பகுதியிலுள்ள பழங்குடி மக்கள் தங்கள் பிள்ளைகளை ஆரம்பக் கல்வி முடித்தவுடன் நிறுத்தி விடுகின்றனா்.
இதையறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நசுருதீன் அந்த வனக் கிராமத்துக்குச் சென்று பெற்றோரைச் சந்தித்து பிள்ளைகளை உயா்கல்விக்கு அனுப்ப அறிவுரைகள் வழங்கினாா்.
பழங்குடி மாணவா்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தாா். வட்டார கல்வி அலுவலா் வெள்ளியங்கிரி, தலைமை ஆசிரியா்கள் செல்வம் ,முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.