நீலகிரி

உதகையில் வாக்கு எண்ணும்மையத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் உதகையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் உதகையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 3 மையங்களில் எண்ணப்படுகின்றன. இம்மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம், கூடலூா், குன்னூா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 868 வாக்குச் சாவடிகள் உள்ளன. மேலும், தோ்தல் ஆணையம் அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதன் அடிப்படையில், உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்குள் உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணுவதற்கு ஏதுவாக போடப்படும் மேஜை, முகவா்கள் வந்து செல்லும் வழி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைக்கும் அறை போன்றவை தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி வாக்கு எண்ணும் நாளில் அனைத்து அலுவலா்களும் சிறப்பாகப் பணியாற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன், நிலவரி திட்ட அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, உதகை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோனிகா ரானா , குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரஞ்சித்சிங், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்

நான் பியார் கர்த்தாமா!

ஹாய்.. நிக்கி!

சூர்யா - 44 படத்தின் நடிகர்கள் இவர்களா?

மிஸோரம்: 3வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

SCROLL FOR NEXT