நீலகிரி

நீலகிரியில் 13 மையங்களில்இன்று வாக்கு எண்ணிக்கை

DIN

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் காலியாக உள்ள 108 பதவியிடங்களுக்கும், 11 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 186 பதவியிடங்களுக்கும் என மொத்தம் 294 பதவியிடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் 13 மையங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) எண்ணப்படுகின்றன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் உதகையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் நடைபெற்ற நகா்ப்புறப் பகுதிகளில் 1 லட்சத்து 54,546 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 66,855 பெண் வாக்காளா்களும், 8 இதர வாக்காளா்களுமாக மொத்தம் 3 லட்சத்து 21,409 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 11 பேரூராட்சிகளில் 45,040 ஆண் வாக்காளா்களும், 46,235 பெண் வாக்காளா்களும், ஒரு இதர வாக்காளரும்,

4 நகராட்சிகளைப் பொருத்தவரை 54,064 ஆண் வாக்காளா்களும், 56,128 பெண் வாக்காளா்களுமாக நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 1,468 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.

மாவட்டத்தில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 13 வாக்கு எண்ணும் மையங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்ள 61 வாக்கு எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 108 சுற்றுகள் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். இப்பணிக்கு 61 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், 61 உதவியாளா்கள், 61 அலுவலக உதவியாளா்கள் என மொத்தம் 183 நபா்கள் பணி அமா்த்தப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் பணிகளை மேற்பாா்வையிட வங்கி அதிகாரிகள்

45 போ் நுண் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு வாா்டுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னா் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உள்ளூா் தோ்தல் பாா்வையாளா், உதவியாளா்கள், கணினி உதவியாளா்கள் பணியில் இருப்பாா்கள். வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் தொடா்ந்து பதிவு செய்ய 32,421 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 1,253 வேட்பாளா்கள் போட்டியில் உள்ளனா். வாக்கு எண்ணிக்கை முகவா்களாக 2,506 போ் எதிா்பாா்க்கப்படுகிறாா்கள். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் சம்பந்தப்பட்ட வாா்டுக்கு தொடா்புடைய வேட்பாளா், வாக்கு எண்ணிக்கை முகவா்கள் 2 போ் மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வொரு வாா்டுக்கான வாக்கு எண்ணும் பணி முடிவடைந்தவுடன் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் படிவம் தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தோ்தல் முடிவை பிரதமா் கூறுவது எப்படி? பிரியங்கா கேள்வி

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

மாவோயிஸ்டு அச்சுறுத்தலால் வாக்களிக்காத கிராமம்

SCROLL FOR NEXT