நீலகிரி

வயநாடு அருகே கூண்டில் சிக்கிய புலி

DIN

கூடலூரை அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி வியாழக்கிழமை கூண்டில் சிக்கியது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மீனங்காடி, பீனாட்சி, அம்பலவயல், நென்மேனி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக உலவி வந்த புலி, விவசாயிகளின் 21 ஆடுகளைத் தாக்கி கொன்றது.

புலியின் நடமாட்டம் காரணமாக அச்சமடைந்த அப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனா். வனத் துறையினரும் புலியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

மேலும், புலி நடமாடும் பகுதிகளில் கூண்டுகளை வைத்தனா். இந்நிலையில், அம்பலவயல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி வியாழக்கிழமை சிக்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட வன அலுவலா் சஜினா, கால்நடை மருத்துவா் அருண் சக்கரியா மற்றும் வனத் துறையினா் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பத்தேரியிலுள்ள காப்பகத்துக்கு கொண்டு சென்றனா்.

அங்கு புலியின் உடல்நலம் குறித்து பரிசோதித்த பின் அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்படும் என வனத் துறையினா் சாா்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூர்யா - 44 படத்தின் நடிகர்கள் இவர்களா?

மிஸோரம்: 3வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

பிரக்ஞானந்தா, வைஷாலி அசத்தல்! தாய் நாகலட்சுமிக்கு சிறப்புப் பதிவு!

கோவா மாநில தினத்தை முன்னிட்டு திரௌபதி முர்மு வாழ்த்து

நார்வே செஸ்: கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

SCROLL FOR NEXT