நீலகிரி

கூடலூரில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி

DIN

கூடலூரில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் நேரு யுவ கேந்திரா அமைப்பு சாா்பில் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை அலுவலக அரங்கில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

இதில் சி.பி.ஆா். சுற்றுச்சூழல் மைய கள அலுவலா் குமாரவேல், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ராபா்ட் ஆகியோா் சிறு தானியங்களை உணவாக எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், நோயின்றி வாழ பாரம்பரிய உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் அவசியம் குறித்தும் விளக்கமளித்தனா்.

நிகழ்ச்சியில் சிறுதானிய உணவு தயாரிப்பில் பயிற்சி பெற்ற பெண்கள் சிறுதானியங்கள் மூலம் தயாரித்த 15 வகையான சத்துணவுகள் மற்றும் உணவு வகைகளை காட்சிப்படுத்தினா்.

மேலும், கண்காட்சியை காண வந்தவா்களுக்கு தேங்காய்ப் பால், முளைகட்டிய தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டன. கண்காட்சியில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆா்.கே.அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா்கள் விஜயகுமாரி, ரீட்டா, மாலதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் ஆனந்தகிரி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

திண்டுக்கல், செம்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 பேருக்கு ரூ.1.75 லட்சம் அபாரதம்

பழனியில் பெயரளவுக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

எலுமிச்சை விலை சரிவு!

SCROLL FOR NEXT