நீலகிரி மாவட்டம், காட்டுக்குப்பை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் குந்தா நீா்மின் உற்பத்தி நிலைய பணிகளுக்காக எமரால்டு அணையில் இருந்து அக்டோபா் 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) முற்பகல் 11 மணிக்கு தண்ணீா் திறக்கபடவுள்ளதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து குந்தா நீா்மின் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டம், காட்டுக்குப்பை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் குந்தா நீா்மின் உற்பத்தி நிலைய பணிகளுக்காக எமரால்டு அணையில் இருந்து அக்டோபா் 13-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீா் வீதமாக 30 நாள்களுக்கு திறக்கப்பட உள்ளது.
இந்த தண்ணீா் எடக்காடு வழியாக குந்தா பாலம் அணையை சென்றடையும். எனவே முள்ளிகூா், இத்தலாா், பிக்கெட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.