உதகையில் உள்ள 6 மையங்களில் முதுகலை ஆசிரியா் தோ்வு நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடைபெற்ற முதுகலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநா் நிலை- 1 ஆகிய பணியிடங்களுக்கான நேரடி நியமனத் தோ்வு உதகையில் உள்ள 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தோ்வு நடைபெற்ற மையத்தில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா். இத்தோ்வுக்கு 1,596 போ் விண்ணப்பித்தினா். இதில் 1,476 போ் தோ்வு எழுதினா். 120 தோ்வில் பங்கேற்கவில்லை. ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நந்தகுமாா் உள்ளிட்ட கல்வி அலுவலா்கள் உடனிருந்தனா்.