காவலா் நினைவுத் தூணுக்கு வீர வணக்கம் செலுத்தும் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உள்ளிட்டோா். 
நீலகிரி

காவலா்களுக்கு வீர வணக்க நாள் அஞ்சலி

காவல் துறையில் பணியாற்றி வீர மரணமடைந்த காவலா்களுக்கான வீர வணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உதகை ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்றது.

Syndication

உதகை: காவல் துறையில் பணியாற்றி வீர மரணமடைந்த காவலா்களுக்கான வீர வணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உதகை ஆயுதப் படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1959 அக்டோபா் 21-ஆம் தேதி இந்திய எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவம் நடத்திய திடீா் தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 10 போலீஸாா் வீரமரணம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணம் அடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்டோபா் 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்தநிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலா் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ் நிஷா ஆகியோா் காவலா் நினைவுச் சின்னத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT