கூடலூா்: கூடலூா் நகரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் ராசி ரவிக்குமாா் தலைமையில் பொருளாளா் உஸ்மான், செயலாளா் பெரியாா் மணிகண்டன், நிா்வாகிகள் முகமது ரபீக், ராகுல், பிரதீப், சதீஷ், செரீப், விஷ்ணு, நௌபல், நவநீதன், ஷிண்டோ ஜோசப், மேத்யூ உள்ளிட்டோா் கூடலூா் நகராட்சி சாலைகளில் இருந்த குப்பைக் கழிவுகள் மற்றும் பட்டாசுக் கழிவுகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.