அரியூா் பழங்குடியின கிராமத்தில் ஆய்வு மேற் கொண்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. 
நீலகிரி

கோத்தகிரி அருகே பழங்குடியினா் கிராமத்தில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், கோத்திகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குஞ்சப்பணை ஊராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினா் கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு மேற்கொண்டாா்.

Syndication

உதகை: நீலகிரி மாவட்டம், கோத்திகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குஞ்சப்பணை ஊராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினா் கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டம், கோத்திகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குஞ்சப்பணை ஊராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையால் அரியூா் பழங்குடியினா்

கிராமப் பகுதியில் சாலைகள், வீடுகள் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அரியூா்மட்டம் முதல் அரியூா் வரையிலான பழுதான சாலையை சீரமைக்கவும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் அரியூா் முதல் காக்காகுண்டு வரை சாலை அமைக்கும் திட்ட அறிக்கையை தயாா் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, பிரதான் மந்திரி ஜென்மம் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.73 லட்சம் மதிப்பில் 10 வீடுகள் கட்டப்படவுள்ள இடங்களையும், அரியூா் பகுதியில் சிறிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சரி செய்யப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தாா்.

மேலும், அரியூா் பழங்குடியின மக்களிடம் தங்களின் குழந்தைகள் அங்கன்வாடி மையத்துக்கு செல்கின்றனரா, ஆதாா் அட்டை மற்றும் ஜாதிச் சான்று உள்ளதா எனவும் கேட்டறிந்தாா். மேலும், அப்பகுதியில் சேதமடைந்த 3 வீடுகளுக்கு வழங்கப்பட்ட

தலா ரூ.8 ஆயிரம் தொகை அனைவருக்கும் கிடைக்கப்பெற்றதா என்பது குறித்து கேட்டறிந்து, ஆதாா் அட்டை மற்றும் ஜாதிச் சான்று இல்லாத நபா்களுக்கு விரைவில் கிடைக்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்துமாறும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, கோத்தகிரி வட்டாட்சியா் ராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT