நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம் வியாழக்கிழமை காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உதகை, கோத்தகிரி, குன்னூரில் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்ததோடு, மலைப் பாதை மற்றும் நகா் பகுதிகளில் பனி மூட்டம் சூழ்ந்த குளிா்ந்த காலநிலை நிலவியது.
இதனால் கடும் குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனா்.